PGBOAவும், PGBWUவும் இணைந்து, வரும் ஜனவரி 26, 27, 28 ஆகிய தேதிகளில் புதிய தலைமுறை தோழர்களுக்காக ஒரு தொழிற்சங்க பயிற்சி முகாம் நடத்துவதென திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை. ஜனவரி 27 நான்காவது சனிக்கிழமை விடுமுறை. அப்புறம் ஞாயிறு. மூன்று நாட்களும் விடுமுறை.
நல்ல தனித்த இயற்கைச் சூழலில், முழுக்க முழுக்க நம்மைப் பற்றி பேசும், நாம் மட்டும் இருக்கும் இடத்தில் நம் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
தொழிற்சங்கம், தொழிற்சங்கத்திற்கு சவாலான சூழல், தொழிலாளர்களுக்கு எதிரான சமூகம் குறித்த புரிதல், தொழிலாளர் வர்க்கம் குறித்த தெளிவு, தொழிலாளர்கள் உரிமைகள் குறித்த சட்ட ரீதியான கல்வி, போராட்டத்தின் அவசியம், கூட்டுச் செயல்பாடு, தோழமையின் அர்த்தங்கள், வங்கித்துறை பற்றிய ஞானம், கிராம வங்கி தொழிற்சங்க வரலாறு இவைகளை நம் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல / சொல்ல ஒரு முயற்சி.
முக்கிய பொருளாதார அறிஞர், சட்ட வல்லுனர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், தொழிற்சங்கத் தலைவர் ஆகியோர் வந்து கலந்துகொள்ளவும், கருத்துகளை நம்மோடு பகிரவும், விவாதிக்கவும் உள்ளனர்.
தொடர்ந்து ஒரே மேடைப் பிரசங்கமாக இல்லாமல், பங்கேற்பாளர்கள் அனைவரும் கலந்துரையாடல்களாக நடத்தும் யோசனை, அதற்கான திரைப்படங்கள், அதன் மீதான பார்வையாளர்களோடு விவாதம், தோழர்களின் தனித்தனமைகளை, திறமைகளை அறிந்து, அவைகளை பொது நன்மைக்கு பயன்படுத்தும் பார்வை என இந்த பயிற்சிமுகாம் புதுமையாகவும், அர்த்தம் கொண்டதாகவும் நடக்க இருக்கிறது.
முதற்கட்டமாக தொழிற்சங்கம் குறித்த பார்வையையும், பயிற்சியையும் அளிக்க உத்தேசித்த 35 தோழர்கள் இந்த பயிற்சி முகாம் குழுவில் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தக் குழுவில் இல்லாத, ஆர்வமுள்ள தோழர்களுக்கு அடுத்த batchல் இதே முறையில் பயிற்சி முகாம் அளிக்கப்படும்.
இடம்:
மதுரையில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கும் புல்லூத்து என்னும் இடத்தில், தானம் அறக்கட்டளை கல்வி மையத்தில், டிஜிட்டல் திரை, ஒலி அமைப்புடன் கூடிய பயிற்சி வகுப்பறை, மூன்று பேர் தங்கும் வசதிகளுடன் கூடிய அறைகள், வட்ட வட்ட மேஜைகளுடன் கூடிய உணவு அறை. திறந்த வெளி குடில், மரங்களுடன் கூடிய ஏகாந்தமான பிரதேசத்தில் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
அட்டவணை:
பயிற்சி முகாம் கீழ்கண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது:
26.1.2018, Friday
காலை 10 மணி
மனிதக் கதை – தோழர். சகஸ்ரநாமம் (with power point)
மனித சமூகக் கதை – தோழர். மோகனா (With Power point)
விவாதம்
பிற்பகல் 2 மணி
மதிய உணவு
மாலை 3 மணி
எது கலாச்சாரம் – எழுத்தாளர். தமிழ்ச்செல்வன்
மாலை 4.30 மணி
விவாதம்
மாலை 6 மணி
ஆவணப்படம் : Where to invade next?
27.1.2018, Saturday
காலை 9 மணி
காலம் தோறும் பெண்கள் – தோழர். ராஜராஜேஸ்வரி
விவாதம்
காலை 12 மணி
போராடும் தொழிலாளிக்கு ஜாதி இல்லை? – எழுத்தாளர். ஆதவன் தீட்சண்யா
மதியம் 2 மணி
உணவு
மாலை 3 மணி
விவாதம்
மாலை 4 மணி
இடதுசாரி அரசியலும் தொழிலாளர் வர்க்கமும் - தோழர். இரா சிந்தன்
இரவு 7.30 மணி
திரைப்படம் : Four Women by Director Adoor Gopalakrishnan
28.1.2018, Sunday
காலை 9 மணி
வலதுசாரி அரசியலும் தொழிலாளர் வர்க்கமும் – தோழர். கனகராஜ்
பிறபகல் 12 மணி
குறும்படம் : Little Terrorist
மாலை 2.30 மணி
தொழிற்சங்க இயக்கமும், தலைமைப்பண்பும் - தோழர்.சி.பி. கிருஷ்ணன்
மாலை 5 மணி
பயிற்சி முகாம் நிறைவு