top of page

தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கை


தோழர்களே! தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் TNGBWU பொதுச் செயலாளர் தோழர் மாதவராஜ் அவர்களுக்கு explanation letter வழங்கியிருக்கிறது. பிப்ரவரி மாதம் தீக்கதிர் பத்திரிகையில் recruitment சம்மந்தமாக வெளிவந்த ஒரு செய்திக்காக அவருக்கு அந்த கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கிராம வங்கியின் இமேஜ் பொதுவெளியில் டேமேஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் சர்வீஸ் ரெகுலேஷன் படி இது தவறு என்றும் அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கையாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது. ஒரு தொழிற்சங்க தலைவராக தங்கள் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கு சகல உரிமையும் அவருக்கு உண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி எழுத்துரிமை பேச்சுரிமை என்பது அடிப்படை உரிமைகளாகும் அதனை பறிப்பதாகவும் மறுப்பதாகவும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை இருக்கிறது இதனை நாம் அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு கிராம வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக தோழர்களை மிரட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. இது குறித்து நமது 2 சங்கங்களும் இன்று கலந்து ஆலோசித்தன. அதனடிப்படையில் இதற்கு எதிராக உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று தீர்மானித்தன. அதன் அடிப்படையில் மே 14-ஆம் தேதி badge wearing நடத்துவது எனவும் மே 22ஆம் தேதி சேலத்தில் தலைமை அலுவலகம் முன்பாக மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் யோசிக்க பட்டிருக்கிறது.

-S.அறிவுடை நம்பி

பொதுச்செயலாளர், TNGBOA


102 views0 comments
world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page