தோழர்களே,
கடந்த 27.10.2020 அன்று தஞ்சை மண்டலத்தில் managers meeting நடந்துள்ளது. அதில் பங்கேற்ற GM மேலாளர்களை அச்சுறுத்தும் வகையிலேயே பேசியிருக்கிறார். Target achieve செய்யவில்லை என்றால் வெளியே தூக்கி போட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். பெண் அலுவலரை எல்லோர் முன்பும் அழவைத்து இருக்கிறார். கிளை மேலாளர்கள் ஏதாவது கேள்வி கேட்டாலோ குறைகளை சொன்னாலோ CMமிடம் கேளுங்கள் RMமிடம் கேளுங்கள் Chairmanனிடம் கேளுங்கள் என பொறுப்புக்களை தட்டிக் கழித்தவர் stationeryகூட கிளைகளுக்கு தர நடவடிக்கை எடுக்காமல் business development பற்றி பேசியிருக்கிறார்.
உச்சபட்சமாக RM, 'man power shortage இருப்பதாக' தெரிவித்த போது Chairman-இடம் சண்டை போட்டு வாங்கிக்கொள்ளும்படி அனைவர் முன்னிலையிலும் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
நான்கு மணிக்கே அனைவரும் வீட்டுக்குச் சென்று விடுவதாக பொத்தம்பொதுவாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இங்கு நாம் சில விசயங்களை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இது ஒரு பொதுத்துறை நிறுவனம். இங்குள்ள ஒவ்வொருவரும் அதை உணர்ந்து உண்மையுடனும், ஈடுபாட்டுடனும் பணியாற்றி வருவதால்தான் இன்று கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் வங்கியாக தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
நம் வாழ்வாதாரமான நம்வங்கியின் வளர்ச்சி பற்றி நம்மைவிட அக்கறை கொண்டவர்கள் யாரும் இல்லை.
நிலைமை இப்படியிருக்க டெபுடேஷனில் வந்து செல்லும் அதிகாரிகள் என்னமோ தாங்கள் மட்டுமே அக்கறையுள்ளவர்கள் போலவும், நிரந்தரமாய் பணிபுரியும் நாம் எல்லாம் பொறுப்பற்றவர்கள் போல பேசுவது வேடிக்கையானது. போலியானது. அதிகாரத் தொனி மட்டுமே கொண்டது.
பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மட்டுமே வங்கி வளர்ச்சியை உறுதி செய்யமுடியுமே தவிர நிர்வாகம் செய்கிறேன் என்ற பெயரில் அராஜகம் செய்வது அடாவடியாக பேசுவது, நம்மை வங்கியிலிருந்து அந்நியப்படுத்தி பேசுவது, அடிமைகள் போல நடத்துவது என தொடர்வது நல்லதல்ல.
S.அறிவுடை நம்பி
GS-TNGBOA
Comments