top of page

சிறப்பாக நடந்து முடிந்த நமது TNGBOA-TNGBWU சங்கங்களின் முதல் மாநாடு

Updated: Jan 21, 2021



தோழர்களே!


TNGBOA மற்றும் TNGBWU சங்கங்களின், வரலாற்று சிறப்புமிக்க முதல் பொது மாநாடு அனைவரின் ஒத்துழைப்போடும் ஜனவரி 9, 10 தேதிகளில், சேலத்தில் உள்ள ஸ்ரீ வரலெட்சுமி மஹாலில் மிக சிறப்பாக நடந்து முடிந்தது.


ஏறத்தாழ ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட நம் தோழர்கள் தமிழகமெங்கும் இருந்து வந்து கலந்து கொண்டனர்.


விண்னைப் பிளக்கும் கோஷங்களோடும் ஆர்ப்பாட்டமான பறையிசையோடும் நம் மாநாடு துவங்கியது.


மாநாட்டிற்கு TNGBOA வின் தலைவர் தோழர் பத்மநாபன் மற்றும் TNGBWU வின் தலைவர் தோழர் சுரேஷ் அவர்களும் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினர்.


கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


மாநாட்டின் வரவேற்புரையை தோழர். பொன்ரமணி(வரவேற்பு குழு தலைவர்) மற்றும் TNGBOA வின் பொதுச்செயலாளர் தோழர் அறிவுடைநம்பி அவர்களும் வழங்கினர்.


தோழர் கீதா(Advocate), தோழர் ராஜகோபாலன்(GS, BEFI,TN), தோழர் மீனா(Convener, Women Sub-committee,AIRRBEA), தோழர் புளுகாண்டி(President, TNGBRS), தோழர் கிருஷ்ணன்(GS, TNGBRS) தோழர் ரவீந்திரன் (GS, PGBBEU) மற்றும் தோழர் முருகன் (GS, PGBBOU) வாழ்த்துரை வழங்கினார்கள்.


துவக்கவுரை ஆற்றிய தோழர் ராஜீவன்(President AIRRBEA) தலைநகர் தில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டம், கிராமப்புற மேம்பாடு, அமைப்பின் பலம் மற்றும் பலவீனங்களை குறித்து சுருக்கமாக பேசினார்.


மாநாட்டினை வாழ்த்தி பேசிய தோழர் கீதா அவர்கள் கிராமப்புற வங்கிகள் அடித்தட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பட வேண்டும் என்றும் அதனுடைய நோக்கமும் அதுதான் என அறிவுறுத்தினார். குறிப்பாக செயற்குழுவில் Legal Committee கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.


சிறப்புரை ஆற்றிய தோழர் வெங்கடேஸ்வர ரெட்டி (Secretary General -AIRRBEA) அவர்கள் கிராமப்புற வங்கிகள், அவற்றை வகைப்படுத்துதல் (ABC), தேசிய கிராமப்புற வங்கியின் அவசியம், சார்பு வங்கிகளிடமிருந்து Delink செய்து தன்னியல்போடு செயல்படுவது, RRB களின் சேவைகள், கார்ப்பரேட்டுகளின் NPA Write off, அதனால் நஷ்டத்தில் சிக்கும் வணிக வங்கிகள், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு விவசாயிகள் போராட்டம், அவர்களின் தற்கொலைகள் மற்றும் Umbrella organisation குறித்து விரிவாக பேசினார்.


தோழர் C P கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றுகையில் மித்ரா கமிட்டி நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும் ஆள்பற்றாக்குறை குறித்தும் பேசினார். மேலும் 628 தற்காலிக ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம், போனஸ், குடும்ப ஓய்வூதியம், Corporate Licensing Policy, 11th Bipartite Settlement, Special Leave போன்றவற்றை குறித்து விரிவாக பேசினார்.


தோழர் மாதவராஜ்(GS, TNGBWU) அவர்கள் 35 ஆண்டு கால வரலாற்றை நினைவு கூர்ந்தார். இந்த நிர்வாகத்தின் அலட்சியபோக்கு, அதை நம் தொழிற்சங்கம் எதிர்கொள்ளும் விதம், தொழிற்சங்கத்தின் எதிர்காலம், விவசாயிகள் போராட்டம், தொழிலாளர் ஒற்றுமை, இளைஞர் படையின் போர்க்குணம் குறித்து விரிவாக பேசினார்.


தோழர் காமராஜ்(Executive President) அவர்கள் இந்த தொழிற்சங்த்தின் கால் நூற்றாண்டு கால அனுபவங்களை பகிர்ந்து, தொழிற்சங்க கொள்கைகள், எதிர்காலம் குறித்தும் விரிவாக பேசி நன்றியுரை ஆற்றினார்.


நிகழ்ச்சிகளை தோழர் அண்டோ கால்பட், செயலாளர் TNGBOA அவர்கள் தொகுத்து வழங்கினார்.


நம் சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற "நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம் நிர்வாகமா? அரசாங்கமா?" என்னும் தலைப்பில் விவாத அரங்கம் நடைபெற்றது. நமது தோழர்களின் பங்கேற்போடு மிக வித்தியாசமாகவும் உற்சாகமாகவும் அமைந்திருந்தது.


முதல் நாள் முடிவில் "பரிபோகும் உரிமைகளும் சனநாயகமும்" என்னும் தலைப்பில் தோழர் தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் தலைமை தாங்க, தோழர் வெங்கடேசன் MP, எழுத்தாளர், தோழர் ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், மற்றும் தோழர் ஜவகர் நேசன், கல்வியாளர் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். மிகமிகச் செறிவாகவும் தகவல்கள் நிரம்பியதாகவும் இவ்வமர்வு அமைந்தது.


மாநாட்டின் இரண்டாம் நாளான ஜனவரி 10 அன்று தோழர் அறிவுடைநம்பி GS, TNGBOA, மற்றும் தோழர் மாதவராஜ் GS TNGBWU அவர்கள் தனித்தனி ஹால்களில் பொதுச்செயலாளர் அறிக்கை வாசித்தனர். அதன் மீதான‌ விவாதம் நடைபெற்றது. கடந்த ஆண்டிற்கான வரவு செலவு கணக்கினை தோழர் ஆறுமுக பெருமாள், பொருளாளர் TNGBOA மற்றும் தோழர் மகேஷ் பொருளாளர் TNGBWU சமர்ப்பித்தனர். Delagates தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இளம் தோழர்கள் உற்சாகத்தோடு விவாதத்தில் பங்கேற்றனர்.


அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் கருத்துக்கள் போன்றவை இந்த தொழிற்சங்கத்தின் மீதான அவர்களின் புரிதலை நமக்கு எடுத்துக் காட்டியது.


இந்த நிர்வாகத்தின் மீதான கோபமும் அனலாய் தெறித்தது.


நிறைவாய் இந்த ஆண்டிற்கான புதிய செயற்குழு ஒருமனதாய் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மாநாட்டினை சிறப்பாக ஒருங்கிணைத்த Reception committee க்கு நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


மிகுந்த நம்பிக்கையோடும், துணிவோடும், போர்க்குணத்தோடும் இனி வரும் காலங்களிலும் இணைந்தே களமாடுவோம்.


தோழமையோடு


அஸ்வத்

(GS-TNGBWU)


அறிவுடைநம்பி

(GS-TNGBOA)




16 views0 comments

Kommentare


world-spin-crop.gif
bottom of page