top of page

தமிழ்நாடு கிராம வங்கிக்குள் நாமெல்லாம் உற்சாகமான மனநிலையில் காலடி எடுத்து வைப்பது என்பது இப்போது நிர


தோழர்களே!

பாண்டியன் கிராம வங்கியிலும், பல்லவன் கிராம வங்கியிலும் மார்ச் மாதத்திற்குள் Recruitment நடத்த வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகிறோம்.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இனி நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என தெளிவாகச் சொல்லிவிட்டது. தமிழ்நாடு கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் வங்கிதான் முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்லி விட்டது.

பல்லவன் கிராம வங்கி நிர்வாகமும், இந்தியன் வங்கியிடம் இருந்து வரும் அனுமதியைப் பொறுத்துத்தான் அசையும் நிலையிலிருக்கிறது.

ஆக, இந்தியன் வங்கிதான் இப்போது Recruitment குறித்து முடிவெடுக்க வேண்டும்.

நாம் சென்ற 22ம் தேதி சென்னை சென்று நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு முக்கிய கோரிக்கைகளில் ஒன்று இந்தியன் வங்கி பொது மேலாளரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பாண்டியன் கிராம வங்கியில் வழங்கப்படும் better allowances and benefits தமிழ்நாடு கிராம வங்கியில் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தை இங்கு முன்வைத்து, அழுத்தம் கொடுத்து, சாத்தியமாக்கி இருப்பது AIRRBEA தலைமையில் இயங்கும் நமது நான்கு சங்கங்களே!

அடுத்ததாக நாம் முன்வைத்த முக்கிய கோரிக்கை மார்ச் மாதத்திற்குள் பணிநியமனம். அதுகுறித்து பரிசீலித்து மார்ச் 2ம் தேதிக்குள் சொல்வதாக இந்தியன் வங்கித் தரப்பில் நம்மிடம் சொல்லப்பட்டது. இன்று வரை எந்த அறிவிப்பும் சாதகமாக இல்லை.

தமிழ்நாடு கிராம வங்கியான பிறகு, பணிநியமனம் என்பது உடனடியாக நடத்தும் சாத்தியங்கள் மிக மிக குறைவு. ஏப்ரல்1ம் தேதி தமிழ்நாடு கிராம வங்கியின் போர்டு மீட்டிங் நடந்து, தமிழிநாடு கிராம வங்கிக்கான அனைத்து Policy, Rules, guidelines வரையறுக்கப்படும். அதைத் தொடர்ந்து ஏராளமான நிர்வாகப் பணிகள், வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளுக்கான சிக்கல்கள், ஆடிட்டிங், யோசித்தேப் பார்த்திராத சிககல்களும், அது இதுவென ஏராளமான உடனடி பிரச்சினைகளும் முன்னிற்கும். பணி நியமனம் குறித்து நிர்வாகம் அப்போது நினைத்துக் கூடப் பார்க்காது.

ஆனால் கிளையில் நாம் கடும் அவதியும், வேதனையும், அடைந்து கொண்டிருப்போம். ஒவொரு நாளும் நமது வங்கிப்பணி என்பது சுமையானதாகி விடும், மன அழுத்தம், அதிருப்தி, லீவு எடுக்க முடியாத நிலமையெல்லாம் நம்முன் வந்து நிற்கும். அதைப் பற்றி அப்போதும் சங்கங்களே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்றுதான் நாம் முன்கூட்டி உணர்ந்தும், அறிந்தும் பணிநியமனம் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனத் துடிக்கிறோம்.

வங்கியின் நிர்வாகப்பணிகளுக்கு நிர்வாகம் முன்னுரிமை கொடுப்பது போல ஒரு தொழிற்சங்கம் தன் உறுப்பினர்களின் நலனுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். இரண்டையும் சரியாக புரிந்து கொண்டு சரியாக காரியங்கள் ஆற்றுவதில்தான் ஒரு சரியான நிர்வாகத்தின் Balanced approach இருக்கிறது.

இந்தியன் வங்கி நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக கவனம் கொள்ளவில்லை என்றால் அடுத்தக் கட்டமாக-

1. நம் நான்கு சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் இந்தியன் வங்கி CMDக்கு தனித்தனியாக கடிதம் எழுதுவதென்றும்

2. ஏற்கனவே நாம் நடத்துவதாயிருந்து ஒத்தி வைத்த தர்ணவை மார்ச் 22ம் தேதி சேலத்தில் பல்லவன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக நடத்துவதென்றும்

முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்த நமது நான்கு சங்கங்களின் சர்க்குலர்கள் உடனடியாக வெளியாகும்.

அதற்கு பின்பும் சாதகமான நிலைமைகள் உருவாகாமல் போனால், பணி நியமனம் நடத்தப்படாவிட்டால், தொடர்ந்து வேலைநிறுத்தமும், அதைத் தொடர்ந்து Non co-operation என உறுதியான போராட்டங்களும் நடத்துவது எனவும் யோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடனடியாக பணி நியமனம் நடத்தி ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தி, தமிழ்நாடு கிராம வங்கிக்குள் நாமெல்லாம் உற்சாகமான மனநிலையில் காலடி எடுத்து வைப்பது என்பது இப்போது நிர்வாகத்தின் கைகளில்தான் இருக்கிறது. அப்படி ஒரு சூழல் ஏற்பட வேண்டுமென்பதே நமது விருப்பமும் ஆகும்.

Pandyan Grama Bank Officers Association

Pandyan Grama Bank Workers Union

Pallavan Grama Bank Officers Union

Pallavan Grama Bank Employees Union


8 views0 comments

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
world-spin-crop.gif

© 2024 | Tamil Nadu Grama Bank Officers Association

bottom of page