top of page

நம் தோழர்களுக்கு வைரஸ் தொற்றை எதிர்க்கும் - உடல் எதிர்ப்பு சக்தி ஆற்றலை வளர்க்கும் மருந்து



அருமைத் தோழர்களே!


வணக்கம்.


கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவலாகி, வேகமாக மக்களைத் தொற்றி வருவதைப் பார்க்கிறோம். நமது வங்கியிலும் சில கிளைகளில், மண்டல அலுவலகங்களில் பணிபுரிகிறவர்கள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றனர். அருமைத் தோழர் சீனிவாசன் அவர்களை கோவிட்-வைரஸ் தொற்றுக்கு இழந்திருக்கிறோம்.


சூழலை நமது இரு சங்கங்களும் வேதனையுடனும், வருத்தத்துடனும் பார்க்கின்றன. நமது நிர்வாகம் தன்னளவில் செய்ய முடிந்த பல காரியங்களை செய்யவில்லை. நமது சங்கங்கள் அவ்வப்போது முன்வைக்கும் யோசனைகளையும் தவிர்க்கவே செய்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கீழே இருப்பவர்களின் கவலையும், வலியும் தெரியாது. வாழ்க்கையும் தெரியாது.


இந்த நிலைமையில், நமது இரு சங்கங்களும் தன்னால் முடிந்த ஒரு காரியத்தைச் செய்ய முன்வந்துள்ளன. நம் தோழர்களுக்கு வைரஸ் தொற்றை எதிர்க்கும் - உடல் எதிர்ப்பு சக்தி ஆற்றலை வளர்க்கும் - மருந்தனை அனைத்துத் தோழர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளன.


கேரள அரசு பரிந்துரைத்து வீடுகளெல்லாம் கொடுக்கப்பட்ட- இப்போது மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் பரிந்துரைத்து இருக்கின்ற- ஹோமியோபதி மருந்து - "ஆர்சனிகம் ஆல்பம் 30C" ஐ அனைத்துத் தோழர்களுக்கும் நாளை அனுப்பி வைத்திருக்கிறோம்.


ஏறத்தாழ 90 மாத்திரைகள் கொண்ட சிறு பாட்டில்களை கிளைகளுக்கு அனுப்பி இருக்கிறோம். கிளையில் பணிபுரியும் அனைவருக்கும் ஒரு பாட்டில். நம் தோழர்களின் குடும்பத்தாரும் இதனை பயன்படுத்தலாம்.


கீழ்கண்டவாறு இந்த மருந்தினை உட்கொள்ளுமாறு டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

  • காலையில் வெறும் வயிற்றில் பெரியவர்கள் 4 மாத்திரைகள்.

  • காலையில் வெறும் வயிற்றில் சிறியவர்கள் 2 மாத்திரைகள்.

  • ஒவ்வொரு மாதத்திலும் தொடர்ந்து 3 நாட்கள்.

  • மாத்திரைகளை சுவைத்து சாப்பிட வேண்டும்.

இரவு வெகு நேரம் விழித்திருக்காதீர்கள். அது உடலின் எதிர்ப்பு சக்தியையும், ஜீரண சக்தியையும் குறைக்கும். அவ்வப்போது வெந்நீர் அருந்துங்கள். தினம் தோறும் காலையில் உப்பு கலந்த நீரால் தொண்டையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். நாளொன்றுக்கு ஒருமுறையாவது கபசுரக் குடிநீர் அருந்துங்கள். இந்த வழிமுறைகளோடு தவறாமல் இந்த ஹோமியோ மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


உடலை உறுதி செய்வோம்.

நம்பிக்கையோடு காலத்தை எதிர்கொள்வோம்!


தோழமையுடன்


J.மாதவராஜ் S.அறிவுடைநம்பி

GS-TNGBWU GS-TNGBOA

19 views0 comments

Comments


world-spin-crop.gif
bottom of page